அட்டமா சித்திகள்-The 8 Eight Powers of siddhas or The Great Eight Siddhis- Ashta siddhi’s

அட்டமா சித்துகள்- Eight Siddhis (Ashta Siddhi) or The Eight Great Perfections (mahasiddhi).

One gets eight Siddhis: anima, mahima, laghima, garima, prapti, prakamya, istava and vasitva.

As Yogi’s, the Siddhas are said to have the triple control:
1. the control of breath,
2. the control of the seminal fluid, i.e. the control of all passions, and
3. the achievements of desire-less-ness – we are calling the control of mind.
A Siddha is one who has succeeded in stabilizing these controls in oneself, and maintains equanimity and a sense of equilibrium.
A Siddha is one who has attained siddhi, a special psychic and supernatural power, which is said to be eightfold in the science of yoga.

சித்தம் என்பது மனமாகும். தன்னிச்சையாகத் திரியும் மனதினை அடக்கி, இறைவனிடம் செலுத்துகின்றவர்கள் சித்தர்கள் ஆவார். சித் – அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். “சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். மருத்துவம், யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள். எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். அத்தகைய சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது.

எண்வகை சித்திகள்:
1. அணிமா
2. மஹிமா
3. லஹிமா
4. கரிமா
5. பிராப்த்தி
6. பிரகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்

 

விளக்கம் தரும் பாடல்

“அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம்,அவற்றின்
அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராப்த்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
பிரகாமி,ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே!”

  • நூல் – சிவதருமோத்தரம், சிவஞானயோகவியல், 90 சிவதருமோத்தர உரை மேற்கோள், 16 ஆம் நூற்றாண்டுப் பாடல்.
    1. அணிமா:
    பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறிய தாகக்காட்டுவது/ ஆக்குவது.
    Aṇimā: reducing one’s body even to the size of an atom

முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில்
அணிந்த அணிமாகை தான் ஆம் இவனும்
தணிந்த அப் பஞ்சினும் தான் ஒய்யது ஆகி
மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே.

673: Anima Having succeeded in shooting Kundalini to Meru through The Spinal Cavity If he perseveres for a year, He will attain Anima Siddhi; Lighter than flimsiest cotton wool will he be Yet invincible will he be.

2. லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது
Laghima: becoming almost weightless

ஆகின்ற அத் தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலது ஆய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்றதை ஆண்டின் மால் அகு ஆகுமே.

674: Laghima If after visioning Thani Nayaki (Adi Sakti) And the Tattvas that go with Her, For five years the yogi perseveres steadfast He attains the Siddhi that is Laghima; The power to penetrate anywhere at will.

3. மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
Mahima: expanding one’s body to an infinitely large size
மெய்ப்பொருள் சொல்லிய மெல் இயலாள் உடன்
தன் பொருள் ஆகிய தத்துவம் கூடிடக்
கைப் பொருள் ஆகக் கலந்திடும் ஓர் ஆண்டின்
மைப் பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே.

676: Mahima A year after attaining Laghima When Tattvas take their refuge in Sakti of Form Tender, Will Mahima Siddhi be; As plain as his palm It shall be for the yogi to see.

4. பிராப்த்தி:
எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
Prāpti: having unrestricted access to all places

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படை அவை எல்லாம்
கொண்டவை ஓர் ஆண்டு கூட இருந்திடில்
விண்டதுவே நல்ல பிராத்தி அது ஆகுமே.

679: Prapti in a Year After Visioning Sakti He who thus stood in Mahima Visions the Lady of Tattvas (Tattva Nayaki) And the Celestial Bhutas, 160 If the yogi thus perseveres continuous for a year Then he attains Prapti divine.
5. கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.
Garima: becoming infinitely heavy

ஆகின்ற மின் ஒளி ஆவது கண்டபின்
பாகின்ற பூவில் பரப்பவை காணலாம்
ஏகின்ற காலம் வெளிஉற நின்றது
போகின்ற காலங்கள் போவதும் இல்லைஏ.

680: Time Stops in Prapti Having visioned the dazzling Light of Sakti, The Siddha perceives the Cosmos vast That unto a flower unfolds, The past merged into Space And the future Time for ever stops.
6. பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன் றுதல்.
Prākāmya: realizing whatever one desires

அறிந்த பராசத்தி உள்ளே அமரில்
பறிந்தது பூதப் படை அவை எல்லாம்
குவிந்து அவை ஓர் ஆண்டு கூட இருக்கில்
விரிந்தது பரகயம் மேவலும் ஆமே.

682: Prakamya a Year After Prapti When Prapti is attained Parasakti resides palpably within; And all Tattvas flee When he is for a year thus, He attains the power to transmigrate into alien bodies.

7. ஈசத்துவம்:

ஐந்து தொழில்களை நடத்துதல்.
Iṣṭva: possessing absolute lordship

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படை அவை எல்லாம்
கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில்
பண்டை அவ் ஈசன் தத்துவம் ஆகுமே.

684: Isatva a Year After Prakamya A year rolls by after the Siddha attains Prakamya And he perseveres in his adoration Then he visions Sada Siva Sakti and Her hosts of Bhutas And attains Isatva.
8. வசித்துவம்
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலிய வற்றைத் தம்வசப்படுத்துதல்.
Vaśtva: the power to subjugate all.

தன்மை அது ஆகத் தழைத்த கலையின் உள்
பன்மை அது ஆகப் பரந்த ஐம் பூதத்தை
வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின்
மென்மை அது ஆகிய மெய்ப் பொருள் காணுமே.

687: After One Year of Isatva Yogi Attains Power to Perceive God in Vasitva If within the cool kala of the moon The Siddha contains the elements five In a year shall he attain The power rare to perceive the True One.