Dr.N.Anandhapadmanabhan B.I.M., D.AC.,Retired Assistant Medical officer, Siddha Research Consultant.

History of TKN Vaidhyashala & Gurukulam TKN Siddha Ayurveda Vaidhyashala&Gurukulam, initiated by Sri. T. K. Narayana Sarma, has been serving the society since 1935. Located in Podanur (Coimbatore) since the time of establishment, the Vaidhyasala serves the people from the same place till date. About founder T.K.NarayanaSarma was born in Chala (Trivandrum, Kerala) to KunjanpillaAsan […]

Maha sudarsana Maathirai -தொற்றுநோய்களை விரட்டும் மகா சுதர்சன மாத்திரை.

தொடர் மழையால் சிறு குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோயாளர்கள், கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சத்து குறைவாக உள்ளவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள். சிறு தலைவலிக்காக மருத்துவமனை சென்றால்கூட, குறைந்தது இருநூறு ரூபாய் ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது. காய்ச்சலாக இருந்தால் ஒரு வாரத்துக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகிறது. மலிவு விலை மருந்து தினசரிக் கூலித் தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும்? அதுவும் தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்து […]

Shirodhara Massage – மனதையும் மூளையையும் சீராக்கும் சிரோ தாரை

தலையில் எண்ணெயைத் தாரை போல் விழ வைப்பது, ஆயுர்வேதத்தில் பின்பற்றப்படும் புகழ்பெற்ற சிரோ தாரை என்ற சிகிச்சை. இது தலையில் ஏற்படுகிற சிறுசிறு கட்டிகள், தலைவலி, தலை எரிச்சல் போன்றவற்றுக்குச் சிறந்தது. இம்முறையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யப்பட்ட நோயாளியின் உடலில் மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயம் ஊற்றப்படும். பொதுவாக வாத நோய்களுக்கு இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. சில நேரங்களில் மூலிகை சேர்த்துக் காய்ச்சப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டுப் புளிக்க வைக்கப்பட்ட தானியாம்லம் (தானியங்களால் செய்யப்பட்ட காடி) பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சிகிச்சை […]

ஆஸ்துமாவும் திப்பிலி ரசாயனமும்

இந்தப் பருவகாலத்தில் பலரையும் கஷ்டப்படுத்தும் நோய்களுள் ஒன்று ஆஸ்துமா. ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது? பல்வேறுபட்ட ஒவ்வாமைகளால் ஆஸ்துமா ஏற்படுகிறது என்பது பொதுவான கருத்து. வீடுகளில் நாய், பூனை, கிளி, புறா, முயல் போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இந்நோய் அதிகம் வர வாய்ப்புண்டு. ஒட்டடை, தூசி, புழுதி, அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதாலும், அடுப்பு புகை, தரமற்ற சாம்பிராணி புகை, கழிவறை, தரையைச் சுத்தப்படுத்தும் வேதியியல், ரசாயனப் பொருட்களின் ஒவ்வாமையாலும், புகை, மது, பொடி, சுயிங்கம் போன்றவற்றின் […]

மரபு மருத்துவம்: மகிழ்ச்சியான கர்ப்ப காலத்துக்கு…

கருத்தரிப்பு மகிழ்ச்சிகரமான விஷயமாக மட்டுமே கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. கருத்தரிப்பு தொடர்பான சந்தேகம் தோன்றும்போதெல்லாம், “நாமப் பிரெக்னென்டா இருக்கோமா? இல்ல, வேற ஏதாவது ஹார்மோன் பிரச்சினையா இருக்குமோ?” என்று குழம்பும் மனநிலை இன்றைக்கு அதிகரித்துவிட்டது. `பிரெக்-கார்டு’ பரிசோதனை தொடங்கி `ஸ்கேன்’ மற்றும் மருத்துவரின் பரிசோதனைவரை முடிந்து மகப்பேறு உறுதியானாலும்கூட, உடனே உற்றார், உறவினருக்கு அறிவிப்பதையும்கூட எல்லோரும் இப்போது விரும்புவதில்லை. எல்லாம் நல்லபடியாகக் கூடி வரும்போதே சொல்கிறார்கள். இப்படிப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய கர்ப்பக் காலத்தில், கர்ப்பிணிப் பெண்களைப் […]

உலகம் அறியாத சித்த மருத்துவக் கொடைகள்

சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவ வளர்ச்சிக்குக் கொடையாகக் கொடுத்தது தடுப்பூசி (vaccine) எனலாம். இன்றைய தடுப்பூசிகளின் முன்னோடி சித்த மருத்துவம் என்பதை அமெரிக்காவின் பிலடெல்பியா மருத்துவ சங்கம் (இணைய தள முகவரி www.history of vaccine.com ) தரும் தகவல் மூலம் அறியலாம். கி.பி. 1545-ல் தென் தமிழகத்தில் பெரியம்மை (small box) வராமல் தடுக்க, பெரியம்மை பாதிக்கப்பட்டவர்களின் கட்டியிலிருந்து ஊசியில் குத்தி, நோய் வராதவர்களுக்கு ஊசியிட்டு நோய் வராமல் தடுக்கும் (inoculation) வழக்கம் ஓவியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. […]

சித்த மருத்துவத்துக்கு நோபல் தகுதி உண்டா?

மூலிகைச் செடியிலிருந்து (Artemisia annua) மலேரியாவுக்கான மருந்தைப் பிரித்து எடுத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததற்காக, கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீனப் பாரம்பரிய மருத்துவத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு வரலாற்றில் முதன்முறையாகப் பாரம்பரிய மருத்துவத்துக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது. சீனப் பாரம்பரிய மருத்துவம் நெடிய வரலாற்றைக் கொண்டது. அதேநேரம் நம்முடைய சித்த மருத்துவம், அதற்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. சித்த மருத்துவத்தின் பெருமைகளைப் பலரும் சரியாக உணர்ந்துகொள்ளாமல் இருப்பது துரதிருஷ்டம்தான். சித்த மருத்துவம் பற்றி நம்மிடையே பல்வேறு […]

சர்க்கரை கம்மியாய் ஒரு தேகம்!

  நம்மில் பெரும்பாலானவர்கள் இனிப்பு ருசிக்கு அடிமையானவர்கள்தான். இனிப்புக்கான வேட்கை, நாம் குழந்தைகளாக அம்மாவிடம் அருந்தும் தாய்ப்பாலிலிருந்து தொடங்குகிறது. இந்தியாவில் ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 20 கிலோ வெள்ளைச் சர்க்கரையை உட்கொள்கிறார். ஒரு இந்தியர் சாப்பிடும் சீனியின் அளவை உலக சராசரியுடன் ஒப்பிட்டால், அது நான்கு கிலோ குறைவுதான். ஒரு அமெரிக்கர் சராசரியாக தினசரி 20 தேக்கரண்டி வெள்ளைச் சர்க்கரையை உட்கொள்கிறார். ஆனாலும் வெள்ளைச் சர்க்கரை வெறுமனே ஆற்றலைத் தருகிறதே தவிர, அதனால் உடலுக்கு எந்தச் […]

வாழ்க்கையை தொலைத்ததால் வந்ததா நீரிழிவு?- ஆங்கில மருத்துவமும், சித்தாவும் இணையும் சிகிச்சை: ஒரு பார்வை

நீரிழிவு நோய் தவிர்க்கவே முடியாதா? வந்த பின்னர் என்ன செய்வது? அதிகரிக்கும் மருந்து விலை, தொடர்ச்சியாக சாப்பிடுவதா? சித்த மருத்துவத்தில் இதற்கு தீர்வு இருக்கிறதா? நீரிழிவு நோய் வந்தவர்கள் என்னதான் செய்ய வேண்டும் என்ற அடுக்கடுக்கான கேள்விகளை தமிழ்நாடு சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் ‘தி இந்து’ தமிழ் இணையதளம் சார்பில் வைத்தபோது அவர் கூறியதாவது: இந்த ஆண்டு நீரிழிவு தினத்தை பெண்களும் நீரிழிவு நோயும் என்பது போல் அனுஷ்டிக்கிறார்கள். சித்த மருத்துவத்தில் நாங்கள் எப்படிப் பார்க்கிறோம் என்றால் […]

Dengue – Nilavembu kudineer Do’s and Dont’s

டெங்குவால் நிரம்பி வழிகின்றன தமிழக மருத்துவமனைகள். இன்னொரு பக்கம், ‘ஆஸ்பத்திரிக்கெல்லாம் எதுக்குப்பா… 10 நாள் நிலவேம்புக் குடிநீர் குடிச்சா சரியாப்பூடும்’ என்று சிலர் சுயமருத்துவம் செய்துகொள்கிறார்கள். நிலவேம்புக் குடிநீர் சிறந்த மருந்துதான். அதேநேரம், நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்வதிலும் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. அது குறித்த கேள்விகளுக்கு சித்த மருத்துவர் கு. சிவரமானின் தலைமையிலான சித்த மருத்துவர் குழுவின் பதில்கள் இவை: நிலவேம்புக் குடிநீரை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்? டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் இந்தச் சூழலில், டெங்குவாக […]