தமிழ் மாதமான ஆனி- ஆடி மாதமானது (ஜூலை-ஆகஸ்ட்) மன – உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான, உற்சாகம் கூட்டுவதற்கான மாதம். பருவகால மாற்றம் காரணமாக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மனிதர்களுக்கு நோய்த் தடுப்பு, உடல் புத்துணர்வு பெறுவதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பருவ காலத்தில் உருவாகும் வளிமண்டல நீர், நமது ஜீரண அமைப்பைப் பலவீனப்படுத்துகிறது. இதனால் செரிமான ஆற்றல் குறைகிறது. இதன் விளைவாக உடலில் நச்சுகள் சேர்கின்றன. ஆனி ஆடி மாதங்களில் மேற்கொள்ளப்படும் ஆயுர்வேத சிகிச்சைகள் அதிக பலன் கொடுப்பதாகக் […]
Tamil Hindu

பாடாத நாவும் பாட – ஆடாதோடை!!!
‘ஆடாதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழி, ஆடாதோடையின் மூலம் குரல் ஒலி கரகரப்பின்றி இனிமையாகும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. கூடவே குரல்வளைப் பகுதியில் மையமிடும் நுண்கிருமிகளை அழிக்கும் என்ற அறிவியல் உண்மையை மறைமுகமாக எடுத்துரைக்கிறது. சளி, இருமல் போன்ற கபம் சார்ந்த நோய்களுக்கு ஆடாதோடை முக்கியமான எதிரி. ‘இருமல் போக்கும் ஆடாதோடை’ என்ற வாய்மொழியின் நீட்சியாக, கிராமங்களில் இதன் பயன்பாடு இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கைப்பு சுவையைக் கொண்டிருந்தாலும் இதனால் கிடைக்கும் பயன்களோ மிகவும் […]

மரபு மருத்துவம்: மறக்கப்பட்ட சேனைத் தண்ணீர் மகத்துவம்
தமிழக மக்களிடையே சித்த மருத்துவம் இரண்டறக் கலந்த பழக்கவழக்கமாக மாறியுள்ளதை குழந்தை வளர்ப்புக் கலையில் பயன்படுத்தும் கருவிகள், உணவு மூலம் புரிந்துகொள்ளலாம். பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் பருவங்களான காப்புப் பருவம் செங்கீரைப் பருவம் தாலப் பருவம் சப்பாணிப் பருவம் முத்தப் பருவம் வாரனைப் பருவம் அம்புலிப் பருவம் சிறுபறைப் பருவம் சிற்றிற் பருவம் சிறுதேர் பருவம் அம்மானைப் பருவம் நீராடற் பருவம் பொன்னூசல் பருவம் பந்தாடற் பருவம் சிற்றின் இழைத்தல் பருவம் இவை நவீன குழந்தை மருத்துவம் […]

Maha sudarsana Maathirai -தொற்றுநோய்களை விரட்டும் மகா சுதர்சன மாத்திரை.
தொடர் மழையால் சிறு குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோயாளர்கள், கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சத்து குறைவாக உள்ளவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள். சிறு தலைவலிக்காக மருத்துவமனை சென்றால்கூட, குறைந்தது இருநூறு ரூபாய் ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது. காய்ச்சலாக இருந்தால் ஒரு வாரத்துக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகிறது. மலிவு விலை மருந்து தினசரிக் கூலித் தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும்? அதுவும் தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்து […]

Shirodhara Massage – மனதையும் மூளையையும் சீராக்கும் சிரோ தாரை
தலையில் எண்ணெயைத் தாரை போல் விழ வைப்பது, ஆயுர்வேதத்தில் பின்பற்றப்படும் புகழ்பெற்ற சிரோ தாரை என்ற சிகிச்சை. இது தலையில் ஏற்படுகிற சிறுசிறு கட்டிகள், தலைவலி, தலை எரிச்சல் போன்றவற்றுக்குச் சிறந்தது. இம்முறையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யப்பட்ட நோயாளியின் உடலில் மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயம் ஊற்றப்படும். பொதுவாக வாத நோய்களுக்கு இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. சில நேரங்களில் மூலிகை சேர்த்துக் காய்ச்சப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டுப் புளிக்க வைக்கப்பட்ட தானியாம்லம் (தானியங்களால் செய்யப்பட்ட காடி) பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சிகிச்சை […]

ஆஸ்துமாவும் திப்பிலி ரசாயனமும்
இந்தப் பருவகாலத்தில் பலரையும் கஷ்டப்படுத்தும் நோய்களுள் ஒன்று ஆஸ்துமா. ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது? பல்வேறுபட்ட ஒவ்வாமைகளால் ஆஸ்துமா ஏற்படுகிறது என்பது பொதுவான கருத்து. வீடுகளில் நாய், பூனை, கிளி, புறா, முயல் போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இந்நோய் அதிகம் வர வாய்ப்புண்டு. ஒட்டடை, தூசி, புழுதி, அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதாலும், அடுப்பு புகை, தரமற்ற சாம்பிராணி புகை, கழிவறை, தரையைச் சுத்தப்படுத்தும் வேதியியல், ரசாயனப் பொருட்களின் ஒவ்வாமையாலும், புகை, மது, பொடி, சுயிங்கம் போன்றவற்றின் […]

மரபு மருத்துவம்: மகிழ்ச்சியான கர்ப்ப காலத்துக்கு…
கருத்தரிப்பு மகிழ்ச்சிகரமான விஷயமாக மட்டுமே கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. கருத்தரிப்பு தொடர்பான சந்தேகம் தோன்றும்போதெல்லாம், “நாமப் பிரெக்னென்டா இருக்கோமா? இல்ல, வேற ஏதாவது ஹார்மோன் பிரச்சினையா இருக்குமோ?” என்று குழம்பும் மனநிலை இன்றைக்கு அதிகரித்துவிட்டது. `பிரெக்-கார்டு’ பரிசோதனை தொடங்கி `ஸ்கேன்’ மற்றும் மருத்துவரின் பரிசோதனைவரை முடிந்து மகப்பேறு உறுதியானாலும்கூட, உடனே உற்றார், உறவினருக்கு அறிவிப்பதையும்கூட எல்லோரும் இப்போது விரும்புவதில்லை. எல்லாம் நல்லபடியாகக் கூடி வரும்போதே சொல்கிறார்கள். இப்படிப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய கர்ப்பக் காலத்தில், கர்ப்பிணிப் பெண்களைப் […]