Korakkar Siddhar (கோரக்கர் சித்தர்). உள்மூலம் அறியாமல் ஓடி யோடி உழன்றுகெட்ட மாந்தர்களும் கோடா கோடி பள்ளமீதென் றுணராது பார்த்து ஏங்கிப் பாருலகில் பலவிதமாய்ப் பாபம் செய்து நள்ளிருளை விலக்குதற்கு வழிதான் பாரார் நதிகளெலாம் நீராடி நயந்து சென்று கள்ளமுடை மனத்தவராய்க் கதைகள் பேசிக் காரணமாம் பூரணத்தைக் காணார் மட்டே! மட்டிலடங் காதநன்னூல் மறைகள் மற்றும் மனந்தேற உணர்ந்தாலும் மதிதான் காணார் அட்டியிறை மதியதனை அறிந்திட் டாலும் அலைமனத்தை அகத்தடக்கார் ஆண்மை கொள்வார் எட்டிரண்டு மின்னதென்று இயம்ப […]








